உலகெங்கும் இருந்து தமிழிஷை வளர்த்தெடுத்த, தமிழிஷை தமிழ்
மொழியின் முன்னணி தளங்களில் ஒன்றாக மாற்றி காட்டிய தமிழிஷ் பயனர்கள் அனைவருக்கும்
வணக்கங்கள்.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிஷ் தளம், இன்று தமிழின் தவிர்க்க முடியாத தளமாக
மாறி உள்ளது. நிமிடங்களுக்கொருமுறை புதிய படைப்புகள் என தமிழ் இணைய பயனர்களின் மனம்
கவர்ந்த தளமாக தமிழிஷ் திகழ்கிறது. சிறந்த தமிழ் தளங்கள், வலைப்பதிவுகளை தமிழ் இணைய
சமூகத்திற்கு எடுத்து காட்டி வருவதில் பெருமை அடைகிறோம்.
அதே நேரம் தமிழிஷின் நிர்வாக சுமைகளும் அதிகரித்தே வந்துள்ளன. தமிழிஷை அதன்
வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. தமிழின் பெரிய
பயனர் வட்டத்தை கொண்டுள்ள இந்த தளத்தை மேன்மேலும் சிறப்பாக சர்வதேச தரத்தில் மிகப்
பெரிய அளவில் கொண்டு செல்ல நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் பன்மொழித் தளமான
இன்ட்லியுடன் இணைகிறோம். தமிழிஷில் உள்ள
குறைபாடுகளை களைந்து புதிய சிறந்த சேவைகளை முழுமையாக நீங்கள் இன்ட்லியில் பெற
முடியும்.
இன்ட்லியில் வாசிக்க -
TA.INDLI.COM
இந்நேரத்தில் தமிழ் இணைய பயனர்கள், வலைப்பதிவர்கள், தமிழ் இணைய தளங்கள்
அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.
மிக்க நன்றி.
- தமிழிஷ் குழுவினர்